Pages

April 27, 2010

நினைவுகள் Tamil Kavithai

உன் நினைவுகளை சுமந்து கொண்டு

செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி......

ஏன்  என்றால்

நான் செத்த பிறகு என் உடல்

கல்லறையை தான் !!!

சுமந்து கொண்டு இருக்கும் என்பதால்

மகேஷ்..............

April 17, 2010

என் நூலகமே Neerodai Mahes



நூலகத்தில் நாள் முழுவதும்
தேடியும் இல்லாத அந்த புத்தகம்............
நினைவில் அந்த புத்தகத்தின்
பெயர் இருந்தாலும்...,...
என் கண்கள் உன் பெயர் கொண்ட
புத்தகத்தையே தேடிய வண்ணம் ......

தேடலில் மகேஷ்................

காதலை வருணித்தல்



காத்திருப்பின்
தூண்டலில் தான்
இன்றைய காதல் !!!
காதலை வருணித்தபடியே......

காதலை சில சமயம் 
காத்திருப்புகளில் வைக்கும் 
நிமிடங்களை சில சமயம்
வருணித்தபடியே.....
 

நீரோடைக்காக மகேஷ்.........

நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல்,
உன் நினைவால் நான் எழுதும்
வார்த்தைகள் யாவும்
என் கவிதை ஏட்டில்

அலங்காரப் பொருளாய் ! ! !
வெறும் அலங்காரப் பொருளாய்
வைத்திராமல் எழுத்துகளையாவது
உலகம் அறியட்டும்
என் காதலின் ஆழம் புரிய..
  

............................ மகேஷ் .......................


April 8, 2010

தடுமாற்றம் Kaathal


தடுமாற்றங்களின் பயணத்தில் அழகை
ரசிக்கும் ஆடவனின் கண்கள் ,
அவளில் காந்தப்பார்வை படும்முன்
தப்பித்துக்கொள்ள ,........

தண்டனையாய்
அவளைப் பார்க்காதது போல ஒரு
நடிப்பின் தூண்டலில் ....

இருப்பினும் அந்த அழகை ,
ஓவியமாய் தீட்டிவிடும் அவன் அகம் .

இவண் ஓவியன்
 ..................... மகேஷ்..........................

April 6, 2010

மௌனங்களில்

உன்னை சந்தித்த அந்தகாலை நேரம்..........

வார்த்தைகளால் அர்த்தம் சொல்லாமல்,

வானவில்லாய் ஒரே பார்வையில்

ஆயிரம் அர்த்தங்களை சொல்லிவிட்டு என்னை

கவிஞன் ஆக்கி சென்றாயே !



உன்னால் உனக்காக கவிஞன் ஆனா ஜீவன்  மகேஷ்.

April 1, 2010

தித்திக்குமே

உன்னை நினைத்து அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல தித்திக்கும் !!
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால் .......


மகேஷ்
Related Posts Plugin for WordPress, Blogger...