Pages

July 28, 2010

மாயை


என் காதல் என்னும் மாயையினால் 
உடைந்தது என் இதயக்கண்ணாடி 
என்று இருந்தேன் ,
ஆனால் உடைந்தது அதன் பிம்பம் 
மட்டுமே??
காதல் மாயை தெரிந்து விட்டதால்!!!!!!!!!!!!
மகேஷ்........

July 22, 2010

பனிப்பிரதேசமாக




நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை 
உருக்கி அந்த சமுத்திரத்தில் 
கலந்தாலும் கூட ,
அது பனிப்பிரதேசமாக மாறி விடும், 
ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் 
உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால் 

.....................மகேஷ்???????

காதலிக்கிறேன்


என்னை இழக்காமல், 
என் இதயம் காயப்படாமல், 
எனக்குள் சிரிக்காமல், 
தனிமையில் கரையாமல்,
காதலிக்கிறேன்,  அந்த.....
"காதல்" என்ற வார்த்தையை  மட்டும் !!! 
மகேஷ்!!

இரவல்



அவளின் சோகத்திற்காக 
இரவல் கொடுத்த நினைவுகளிடம் 
திரும்பி செல்கிறேன்.
தொலைத்து விட்டேனோ 
என்ற சந்தேகத்தில் ? .........

மகேஷ் ! @ # $ % ^ & *

ஞாபகங்கள்

வெறுத்த என்னையே 
உன்னால் மறக்க முடியாத  போது????????

விரும்பிய உன்னை மட்டும் 
என்னால் எப்படி மறக்க முடியும்...
........................ஞாபகங்கள் ....................மகேஷ்............

உயிரை அடகு

எனக்காக நீ சிந்திய
கண்ணீர் துளிகளை 
விலை பேசினேன் ........
என் உயிரை அடகு வைத்தாவது
வாங்கலாமென்று........மகேஷ்...

July 20, 2010

காட்சித்திரையில்

 தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த 
புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத 
பூந்தோட்டமாய் ......
எத்தனையோ முகங்கள் கடந்தாலும் 
உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின்
காட்சித்திரையில் .........

மகேஷ்...

ரசிகை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால்
மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் 
கவிதையின் தூண்டலில் நான்.
! ! ! ! ! ! ! ! ! !
முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய )  வார்த்தைகளை
சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்????
இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல்
தவிக்கிறேன்....
உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் 
யாவும் கவிதையாய் பொலிவு பெற்றதால்....
கிறுக்காலில் மகேஷ்.....


July 5, 2010

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின் 
கடைசி நேரப்  பிரிவின் போது ,  
உன் முகத்தில் கண்ட 
அந்த தவிப்புகளில் புன்னகையின் 
 அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன்.
என் இறுதி நேரம் வரை !!!!!!!
.....................மகேஷ்??????? குட்டி பாப்பாக்கு !!
Related Posts Plugin for WordPress, Blogger...