Pages

September 29, 2010

சகுனம் இன்னும் ஒழியவில்லை

கிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் ..
வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை .... 


சகுனம்
வெள்ளை தேவதை வீதி உலா !
சகுனம் என்கிறார்கள் மூடக் கடலில் 
முடங்கிக்கிடக்கும் முட்டாள்கள் 

அந்த வெள்ளை தேவதை வானவில்லாய் 
மாறினாலும் வேறு (சி) பட்டம் சிலநேரங்களில் .


கால்கள் தவறி பல்லி விழுந்தாலும் 
கால்களே இல்லாதவன் எதிரே வந்தாலும் 
கால்கள் இருந்தும் ஊனப்பட்ட இதயங்களின் 
பார்வையில் அது சகுனம் .


காலையில் கரையும் காகம் தான் 
விருந்தாளிகளின் முன்தகவல் (தகவல் களஞ்சியம்)
முழங்கால் முட்டிக்கும் முடிச்சு
போடும் இந்த மூடர்களின் நம்பிக்கை.


விளக்கை சுற்றி வட்டமிடும் 
விட்டில்பூசிகலாய் உள்ள
இந்த மூடர்களின் நம்பிக்கை, அதில்
மூழ்கி மறைவது எப்போது ? ? ?


குழந்தைக்காக காத்திருப்பில் 
மங்கைக்கு மலடி பட்டம் .


சாகசத்தின் உச்சியில் பெண்கள் இருந்தாலும் 
சில இடங்களில் (இல்லை இல்லை )
பல இடங்களில் வழக்கமாய் 
இந்த சகுனம் என்ற விசக்கிருமி இன்னும்.........
................................................................



வருவாயா காதலனே

என் கண்களை அங்கே 
தொலைத்து விட்டு ...
இங்கே நான் அழுதால் 
அறியுமா உலகம் ? ? ?

என் இரவை தூங்க செய்யும் 
ஆதவனே வருவாயா ? ? 

காதலி .......

தாயின் கல்லறை பிரவேசம்


தாய் தந்த கருவறை என்னும் 
சொர்க்கம் தாண்டி 
இந்த பூமி எனும் நரகத்தில் விழுந்தேன்.

என் சொர்க்கமே தாய் உருவில் 
இந்த நரக பூமியில் வாழ்ந்த 
பாக்கியங்கள் கூட  சில வருடங்களே ! !
கண்களாய் இருந்தவள் இன்று கானல் நீராய் ?
தவிக்கும் இதயம் இங்கே அதை தாங்கும் 
உள்ளம் எங்கே ? ? ? ?

" கருவாய் வயிற்றில் "
" அரும்பாய் மடியில் "  
என்னை சுமந்தவள், இன்றும் சுமக்கிறாள்
அந்த கல்லறை கற்களை ....

நான் அறிவேன். அவள் சுமப்பது என் நினைவுகளையும் 
@@  ....தான்... @@

கல்லறை பிரவேசம் செய்த தாயின் நினைவுகளால் வாடிய உள்ளத்தின் வரிகள் ..

இயக்கம் : மகேஷ்

September 27, 2010

கவிதையைத் தேடி


என் தேவதையால் தொலைந்து போன
வார்த்தைகளை தேடி கனவில் கால்
பதிக்கிறேன்

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிடுகிறேன் ........
கவிதையைத் தேடி ஒரு பயணத்தில் ........................

 மகேஷ்                                                 

September 22, 2010

பிரிவு

தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் ,
நினைத்து  ஏங்கிய  ஓர் அனாதைச் சிறுவனின் உளறல்கள் .. 
 

முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் 
பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே...
உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம்
தாய் மடி உறக்கம் தந்தவள் ஆனால் என் 
உறக்கங்கள் தொலைக்கும் பிரிவை தந்து விட்டாயே ! ! !

September 20, 2010

பன்பட்டேன்

 
என் கற்பனையின் துருவங்களை 
அதிகரித்துக் கொண்டே செல்கிறேன் .
 உன் அழகை மிஞ்சும் ஆதாரங்கள் 
எந்த கிரகத்திலும் கிடைக்கப் பெறவில்லை  ..
இதை அறிந்து கொண்டது 
நானாக இருந்தாலும்.,,,, காரணங்கள் 
நீ தான் கண்ணே ........... 
.....................மகி..........

September 8, 2010

கண்டேன் காவியத்தை


கனவில் வந்த என் உளறல்களுக்கு 
உருவம் கொடுத்து, மழலையாய் நினைவில்
சுமந்த உன்னை நிஜத்தில் வரையறுத்த 
நம் முதல் சந்திப்பின் நிகழ்வுகள் சொல்லும் ,
நிழலாய் வாழ்க்கை முழுவதும் வருபவள்  
நீ தான் என்று ....
என்னில் மட்டுமே வசித்த நீ இம்மண்ணில் 
வசிப்பதை அறிந்த நாளும் அதுவே ! !! ! !

சிலிர்க்கும் மழைத்தூறலும் 
சீறி வரும் கோடை காற்றும் 
ஒன்று தான் ! !
கைகோர்த்து  அருகில் நீ நிற்கும் நேரங்களில் ....

 மகேஷ் ...........


தூங்காத நேரங்களில்

நிஜத்தை மறந்தாய்



என் நிஜத்தில் உன் நிழலை
பதிவு செய்தேன் .
நீ உன் நிழலிலாவது என் நிஜத்தை
பதிப்பாய் என்று ..
ஆனால் நீயோ உன் நிகழ்வுகளில்
ஒன்றாய் என் நிஜத்தை 
ஒதுக்கிவிட்டாய்....

மகேஷ்..

September 7, 2010

சிட்டுக்குருவி



கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு
சொந்தக்காரியே .....
உன் உணர்வுகளுக்கு ஆயிரம் 
அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே ..
பலரின் கனவாய்ப் போன
சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு 
வாசல் வழியே காத்திருக்க ! !
என் இதயத்தை வருடிய வார்த்தைகளை 
திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன் .


                               உன் மகேஷ் ...
Related Posts Plugin for WordPress, Blogger...