Pages

October 28, 2010

மனதில் ஈரம்


நீரில் மிதக்கத் தவறி காற்றோடு
சருகாய் பறக்கும் காகித ஓடமாய் !

கானல் நீரில் கரைந்து போகும்
பாலைவன் ஊடகமாய் !
நான் சித்தரிக்கப் படுகிறேன்.

( ஊரெல்லாம் மழை பெய்தாலும் உள்ளம் பாலைவனமாய் உள்ள )
மனதில் ஈரம் காய்ந்த சில சுயநலர் மத்தியில்
வாழும் போது மட்டும் ...
*******************************************

மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....


 - ஈர மனசு ராசா மகேஷ் ..

வாழ்வு கொடு


உன் அரை வினாடி சம்மதங்களை 
மட்டும் என்னிடம் தர விண்ணப்பிக்கிறேன் ..
அதில் என் இப்பிறவியை வாழ்ந்து 
முடித்துக்கொள்வேன் ......

என்னில் நான் விதைத்த பூகம்பத்தை 
உலகறிய செய்யும் மழை நீ !
இவன் - @ ஒரு முறை உன் தரிசனம் 
காண விழையும் விரிசல் விழுந்த மண்....

மகேஷ்கண்ணா .................


மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

October 22, 2010

நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் *************************





என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! !
எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல் 
ஊரார் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கொய்யா மரங்கள்
**************************************************
சாதிப்பிரிவினையை சாக்கடையில் போட்ட 
நிலாச்சோற்றுப் படையல் .........

எங்கள் ஆரவாரத்தால் சூரியனை
மறந்து எங்கள் பக்கம் முகம் 
திருப்பிய சூரியகாந்தி தோட்டம் ..

பால் மறந்த பாலகர்கள் எல்லாம்
பாலூட்டி வளர்த்த அனாதைப் பூனைக்குட்டிகள் ...
ஐந்தறிவு சீவனும் அனாதையாக்கப் படாத 
பூலோக சொர்க்கம் தந்த எங்கள் மழலைப் பருவ 
நண்பர்கள் கூட்டம்................

மின் விளக்குகள் அரங்கேற்றிய 
விட்டில் பூச்சிகளின் நடனம் ...

வண்ணத்துப் பூச்சிகளை சங்கமித்த 
தும்பைப் பூக்களின் தெருவோர அலங்காரம் ..

காகங்களுடன் கபடி விளையாடிய 
மண்புழுக்கள் ! ! ஆம் அன்னப்பறவையாய் 
எங்கள் ஊர் காகங்கள் வாழ்ந்த செழிமையான 
காலமும் எங்கள் ஊர் அங்கமாய் ....

இன்று கனவில் கூட கண்டு ரசிக்க முடியாத 
என் மழலைப் பருவ நாட்களை 
எழுத இந்த வரைவலை போதாது நண்பர்களே............. 


மகேஷ்கண்ணா .......................

மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன்........

October 21, 2010

இதயத்தை வடம் பிடித்து

அன்று என் இதயத்தை வடம் பிடித்து
தேர் போல இழுத்துச் 
சென்ற  (என்) காதலி ! ! ! !
இன்று ஊர் பார்க்க  மணமகள்
ஊர்வலத்தில், அவள் 
கணவனுடன் அலங்கரித்த 
அழகோவியமாய் ... 
ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !

சில காலம் பொறுத்துக்கொள் காதலியே
உன்னில் இதுவரை கண்டிராத
பொறாமை குணம் காண்பேன்
"என் திருமண மேடைமுன் நீ அமர்ந்தது
என்னவளைக் காணும்  கணம் "

மகேஷ்கண்ணா ! !

October 14, 2010

மெழுகு பொம்மை


ன் மனதில் வாழும் 
உன் வீட்டு மெழுகு பொம்மை 
சொல்கிறது உன்னிடம் ********
" நான் படைப்பால் உருகப் பிறந்தவள் "
ஆனால் உனக்கென்ற படைப்பு
உள்ளம் வற்றி, உருகி எழுதிய  
இந்த வரிகளை சற்று வாசித்துப் பார் 
என்று ****************

ண்ணாடிக்கூட்டில் பத்திரமாக 
என்னை வைக்கத் தெரிந்த உனக்கு ....
துடிக்கும் இந்த உயிருக்கு ஏன் ? உன் 
இதயக் கூட்டில் இடம் தரவில்லை ?

 மகேஷ்.

October 10, 2010

உள்ளம் துளைத்த நங்கூரம்

நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின்
இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன் 
வாழத்துடிக்கும் ..
அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து 
நடக்கும் (வாழும்) போது.....

உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள 
வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம்
உன் கரங்களில் மட்டுமே........

மகேஷ்......................

இளைய சமுதாயப் பறவைகளே

விண்ணை முட்டித்தள்ள சிறகெனும் வாள் கொண்டு
பறக்கத்  துடிக்கும் இளைய சமுதாயப் பறவைகளே, சற்று
திரும்பிப் பாருங்கள் ....................

கட்டி முடிக்காப்படாத கோபுரத்தின் உச்சியில்
அமரத்துடிக்கும் பறவை போல,
மரத்தின் கிளை தனை விடுத்து, அதன் நிழலில் கூடுகட்டி
வாழத் துடிக்கும் பறவை போல ,
ஒரு காலத்தில் நான் துடித்த அவசரங்களை சொல்கிறேன்
சில நிமிடங்கள் உங்கள் பார்வைகளை என் வரிகளில்
அடகு வைய்யுங்கள் ......

 சுமைகளை ஏற்றி செல்ல உங்கள் சிறகு ஒன்றும் 
சுமைதாங்கி இல்லை ..
உங்கள் அர்த்தமற்ற ஆசைகளும் சுமைதான்...
நேற்றைய தூக்கத்தின் மிச்சங்களை சேர்த்து
வைக்காமல் இரவின் இருட்டிலேயே தொலைத்து
விடுங்கள் ...
நிரந்தர உறக்கத்தில் உறங்கிக்கொள்ளலாம் .....

நண்பன் மகேஷ்..........

October 7, 2010

சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே


என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன்,
என் இதயத்தின் முகவரியைத்  தொலைத்தேன்,
சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின்
அறைகளை அடைந்து நினைவுகளை 
தேடலாம் என்று பயணித்தேன்.....ஆனால் 
நான் பயணித்த என் இரத்த நாளங்கள் 
அதன் பாதையை மாற்றிக்கொண்டது...... 
நான் என் இதயம் சேராமல் இருக்க ? ? ? ? ?
காரணங்களை ஆராய்ந்த போது ---->>>>
தங்கையே உன் மரணத்தால் என் இதயம் 
நிலநடுக்கத்தின் நிகழ்வுகளாய் இருந்தது .....

கண்ணீரில் உன்னை தேடும் மகேஷ்....
03/10/2010           
"சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே "

உலகை மறந்தாலும் என் எண்ணம் எனும் கரைதனில் 
அலைகளாய் துள்ளி விளையாடும் என் சகோதரி "கோமதி" க்கு சமர்ப்பணம்
.............................................
Related Posts Plugin for WordPress, Blogger...