நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது
வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் #########
வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில்
மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய்
விண்ணில் பயணிக்க ! !
வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும்
இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள்
என்ன செய்தேன் என் இந்தியாவுக்கு ????
பார்ப்பதற்கே வாடைக் கண்களாய்
என் மூக்குக் கண்ணாடி தேடும்
இந்த வயதில் என்ன செய்ய முடியும்
என் இந்தியாவுக்கு ??
தாமத உதயங்கலாய் என்னில்
தினம் தினம் இந்த ஏக்கங்கள..
சந்தர்ப்பங்களை கைது செய்த
சூழ்நிலைகள் சூழ்ந்த பல தருணங்கள் .
விழாக்கால பேருந்தின் நெரிசலில்
சிக்கித் தவிக்கும் விடுகதைகள் ஆனேன் ?
உதிரும் நரைமுடிகள் கூட சொல்லும்
வயதைக் கடத்தி வாசகம் செய்தவன்,
சாகசம் செய்ய மறந்ததேன் ????????
அறுபது வயது நாற்காலிக்காக மகேஷ் எழுதும் வரிகள் .....
கருத்துரை கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள் நண்பர்களே
இது என்னை மேலும் மேலும் மெருகூட்டுகிறது நன்றிகள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....