மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக !
சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட
கண்ணில் படும் பயிர்களெல்லாம்
மரகதமே உன் வாசம் வீசிட.
எதிர் வரும் இரயிலின் தடக் தடக்
சத்தம் நீண்டு கொண்டே போக!
நீ மட்டும் என் இதயத்தில் லப் டப்! லப் டப்!
உன் நினைவுகளின் தாலாட்டில் நானிருக்க
மரணமே சகித்துக் கொள்ளும்
என்னை நெருங்கிட ?
மகேஷ்.......
தமிழ்மணம் விருதுகள் 2010 இல் எனது படைப்பு
கவிதை, இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப் பட்டதை
உங்கள் அனைவருக்கும் சொல்வதில் கடமை பட்டிருக்கிறேன் ...
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்.




