Pages

September 3, 2011

வெட்கச் சிணுங்கல்கள் vetkach sinungal

சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு
உன் வெட்கம்.


நீ உன்  ஈரக்கூந்தல்  உலர்த்தும்போது
சிதறியது நீர்த்துகள்கள் 
மட்டுமல்ல ...
என் இதயமும் தானடி.

உன் துறுதுறு பாவனைகளால் 
குழம்பிப்போனேன்.

உன்  அழகையா இல்லை 
பாவனைகளை ரசிப்பதா என்ற 
நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்.

உனைப்பிரிந்த நேரங்களிலும் என்னில்
ஸ்பரிசமாய் நிலைத்திருக்கும் 
உன் வெட்கச் சிணுங்கல்கள்.
மகேஷ்........

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...