Pages

January 28, 2011

சமுத்திரம் தாங்காது காதலே



நீ, என் மேல் கொண்ட காதல்
என்னும் சமுத்திரத்தை
உன் இதயக் குடுவையில்
அடைக்க முற்ப்படாதே,
கல்லாய் போன உன் இதயத்தில்
ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் )
சம்மதங்கள் ........

ஆனால் இங்கு
 சமுத்திரம் எனும் என் காதல்
தாங்காது காதலியே !,?

மகேஷ்...  

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

January 25, 2011

தாய் புரிந்து கொள்ளாத நேரங்களில்

என் அம்மா சில நேரங்களில் நான்  செய்த தவறுகளுக்கு காரணம் கேட்காமல் என்னை புரிந்து கொள்ளாமல் கோபித்துக் கொள்ளும் போது...என்னில் உதிக்கும் வரிகள்...
(யார் என்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை நீ மட்டும் என் மனதின் அகராதியாய் இரு தாயே ! )



கோபத்திலும் அதிகரிக்கும் உன் பாசம் 

தாயே என்னை நீ புரிந்துகொள்ளாத
நேரங்களில் ,
என் வாழ்க்கையின் அர்த்தங்களை உள்ளடக்கிய
அகராதியின் பக்கங்களை
கிழித்துக் கொண்டே வருவேன்.
ஒரு நாள் அந்த அகராதியின் அட்டைப்பக்கம்
மட்டும் என்னுடன் கல்லறையில்
மண்ணுக்கு இரையாக.....
என் பிரவேசம் நரகம் என்றாலும்
சொர்க்கம் என்றாலும் நீ முதலாய்
காத்திருப்பாய் என்பதை யோசிக்காமல்
எழுதிய வரிகள்...

கண்கள் தழுவிய உறக்கத்திலும்,
களவு போகாத நினைவுகளில் கூட
என்னை திரையிட்டு பார்க்கவே
நினைக்கும் உன் மனம் ..

மகேஷ் 

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

January 21, 2011

என் வீட்டு தெய்வம் : கவிதை



மானிடரைப் படைப்பது பிரம்மன்
என்ற கூற்று எனக்கில்லை,
அம்மா நீ என்னை வடித்ததால் !

உன் முகமே காட்சிகளாய் ,
உன் மடி உறக்கமே சொர்க்கமாய்,
நீயே உலகமாய்
நான் வாழ்ந்த அந்த
பொற்காலம் வேண்டும் எனக்கு
மீண்டும் மீண்டும்......

மழலையாய் தாய் தன் மகவை
பார்ப்பது இயல்பு ...
தாயே நீயோ நான் வளர்ந்த இன்றும்
என்னை பச்சிளம் மகவாய் தாங்க,
சில சமயம் நீயே  என் மகளாய்
சித்தரிக்காப்படும் இயல்புகள் தினமும்.

இன்று அலுவலகம் முடிந்து
நான் தாமதித்து வீடு திரும்பும்
விநாடிகளை  நெருப்புத் துண்டுகளாக்கி
கரங்களில் பற்றி எண்ணிக்கொண்டு
வீட்டின்  முன்னோ, வீதி முற்றத்திலோ,
காத்திருக்கும் ஜீவன்
நீ தான் என் உயிரே !!!!!

கடவுளை மட்டும்
நான் கண்டால்
என் ஆயுளை எடுத்துக் கொண்டு
இதுவரை உன் பச்சிளம் மகவாய் நான் வாழ்ந்ததை
மறுமுறை தா ! என்று கேட்பேன்.




உன் மகனாய் இதுவரை 25 வருடங்கள் வாழ்ந்த இந்த பொற்க்காலம் மறுமுறை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் என்னில் உருகிய வார்த்தைகள் தாயே.!!!!!


 மகேஷ்.....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ..... மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

January 20, 2011

சமுதாயமே எங்கே செல்கிறாய்

 செல்லப் பிராணிகளை படுக்கையறையில்
உறங்க வைக்கத் தெரிந்தவன்,

பெற்றவரை அவர் நிரந்தர உறக்கம் வரை
தலைசாய்த்து தினம் தினம் கிடைக்கும்
நிம்மதி உறக்கம் கூட
கிடைக்கப் பெறாத நிலையில்
மூன்றாவது வீதியில் ஏதோ ஓர்
ஒலைக்குடிசையிலோ,
முதியோர் இல்லத்திலோ விட்டுவிட்டு,
மனைவிக்கு மாணவனாகி,!!

தான் பெற்ற மகவையும் , பள்ளி
விடுதியில்
அடகு வைத்து விட்டு
பிராணிகளுடன் மிருக வாழ்க்கை நடத்தும்
கொடுமைகளும் இங்கு உண்டு.
இது ஒருபுறம் இருக்க!!!!!

ரிகள் கூட்டம்
அரங்கேற்றத் துடிக்கும் மன்னர் ஆட்சி...

என்று மாறும் இந்த சமுதாயத்தின் பாதை . ? ?



மரர் ஊர்திகளில் கூட
அரவாணிகளுக்கு இடம் இல்லை
என்ன உலகமடா இது ?


மகேஷ்.....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ..... மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள் : உழவன் - கவிதை

அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்,அதற்க்கு முன் நமது உழவர்களின் நிலை பற்றி சில வரிகள் சொல்ல வேண்டிய தருணம்.

ன்று செங்குருதி சுண்டலிலும்
ஏர் பிடித்து உழவு செய்து 
அறுவடைக்கு மட்டுமே 
காத்துக் கிடந்த உழவன் .

இன்றும் காத்திருக்கிறான் 
மழைக்காக, நீர் பாசனத்திற்காக, 
வாடகை இயந்திரத்திர்க்காக 
காத்திருப்பில் தேங்கிய நிலைமமாய்.

 அங்கு வயலிலே உழவன் வாடிய 
பயிர்களைப் போல, தினம் தினம்
உயிர்கொடுத்து பயிர் விளைவிக்கையில்,
ஆனால் சிலர்
அரசாங்கம் தரும் அரிசியை
கால்நடைகளுக்கு அரைத்தமாவாய்
கரைத்து வார்க்க.
உழைப்பின் அர்த்தங்கள்
மறந்த மூடத்தனம், இங்கே மட்டுமே.

மனித சக்த்தியை மட்டுமே நம்பிய நிலை மாறி
இயந்திர சக்தி நிறுவக்கூட பொருளாதாரம் 
முட்டுக்கட்டை போடும் நிலையில்....
விளை நிலங்களை 
விலை நிலங்களாக்கி 
குடியிருப்புகளிடம் தொலைத்துவிட்டு ,,,
உணவில்லாமல் தவிக்கப் போகும் 
அடுத்த தலைமுறையை 
நிர்கதியாக்கிய நிலையில் பல
இடங்களில் மடிந்து வரும்  விவசாயம்.

மறுபுறம் உழவுக்கு, அதன் செழிப்புக்கு 
சந்தர்ப்பங்கள் சான்று கொடுக்கும்
செழிமை இருப்பதையும் மறுக்கவும் முடியாது.
எல்லா உள்ளங்களும் தன்னிலை 
பார்க்காமல் கொண்டாடும் இந்த 
தமிழர்  திருநாளை ....
தித்திக்கும் தேன் சுவையும் 
திகட்டாத செங்கரும்பும் 
திகைக்க வைக்கும் ஜல்லிக்கட்டும் சிறக்க.
சாலையோர பூக்களும் காதல் கொள்ளும்
நம் காணும் பொங்கலைக் கண்டு 


என் தமிழ்க் குடும்பத்தாரே
உங்களுக்கு என் இனிய 
பொங்கல் வாழ்த்துக்கள்.


மகேஷ்.......................................

வாசகத்  தூண்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ............. 

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ..... மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

January 11, 2011

மனதை பூட்டி வைத்தாலும்

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

நீ  மனதை எத்தனை நாள்  மூடி (பூட்டி) வைத்தாலும்
உன் மனக் கதவின் முன்
காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை ,
காதல் காரானாக.

உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம்
சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு
வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன்
என் பிராண வாயுவே நீ வரும் வரை .

ஏற்றுக்கொள்வதில் நீ  தாமதங்கள் காட்டுவதால்
என் நிலை பார்த்து அந்த தாமதங்கள் கூட
தாடி வைத்துக் கொண்டு வீதிகளில் திரிகிறது .
***************************************************************
 என் காதலை தாமதங்களில் தங்க வைத்தவளுக்கு
மட்டும் கவிதை ரசனை இருந்திருந்தால்
அவள் என் மேல் காதல் கொள்ளாவிடில் கூட
அவள் மனம் காயப் பட்டிருக்கும்.
அவள் வருத்தங்களை விரும்பாத இவன் நிலாமகேஷ் ......
மகேஷ்..........

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ..... 
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

January 5, 2011

100வது மற்றும் வருடத்தின் முதல் பதிப்பு : சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு)
நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி.

பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல
விருப்பமில்லாமல் வீட்டில் பதியும்
என் கால் தடங்கல்.

இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில்
உறவினரின் கேள்விகளை பதிலாக்கி
நான் வரைந்த பொய் ஓவியம்
தான் "அலுவலகத்தில் வேலைப்பளு".

உறவுகளின் இழிச்சொல்லை
மறுக்கவே, இல்லம் பிரவேசிக்கும்
சில நேரம் கூட, சொந்த வீட்டிலே
எனைப் பெற்ற நிஜங்கள் முன்னே
நகலாக நடிக்கிறேன்.
சொந்த வீட்டில் விருந்தாளியாக ! !.

கனத்த மனதுடன் வினாடிகள்
பயணிக்கும் போது, சில நேரம்
கற்பணையில் (அல்லது நிஜத்தில்) நண்பர்களின்
அரவனைப்பில் தலை சாய்த்துக் கொள்வேன்.
எத்தனையோ உறவுகள் தராத
சுகம் காண்பேன் அதில்.

கண்களை அனைத்துக் கொள்ள
துடிக்கும் உறக்கத்தின் அசைகள்
விடியும் வரை தான், அது போல
சில மணிகளில் மறைந்து போகும்
சொந்த வீட்டிலே விருந்தாளியாக
வாழும் வாழ்க்கை கூட.

பெற்றோரின் வேலைப் பளு / அலச்சியம் / பாங்கற்ற வாழ்க்கை  போன்ற காரணங்களால் பல இல்லங்களில் சிலருக்கு அரங்கேறும் இந்த வாழ்க்கை நிகழ்வுகள்......


மகேஷ்.(100 வது இடுக்கையில்).........

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் ..... மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்
Related Posts Plugin for WordPress, Blogger...