Pages

April 28, 2011

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்.



கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும்
அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு,
முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள்.

சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக
தாகப் போர் செய்யும் எங்களுக்கு, 
எப்போதாவது தற்காலிக சொந்தங்களாய் 
தாலாட்ட வரும் உறவுகளும் கூட கானல் நீராய்.

கந்தல் ஆடையும், கால் வயிற்றுக் கஞ்சியுமே
எங்களுடன் அங்கீகாரம் பெற்ற முத்திரைகளாய்.

ஊசிமுனையில் கோர்க்கப்பட்ட
உதிரிகள் சங்கமித்த மாலையாய் சில பூக்கள் மட்டுமே 
விடுதியில் சம்பரதாயக் கேள்விகளுக்கு பதிலாக.

சிலர் பொழுது போக்கு பயணம் போக
பளிங்கு சாலை அமைக்கையில்,
எங்கள் வாழ்க்கை-
மழை வந்தால் கரைந்து போகும்
சாலையோர நடைபாதை பயணமாய்.

மணல்கயிறு திரிக்க முயற்ச்சித்து
சிலர் வீணாக்கும் பணமோ, மனமோ  இந்த 
சணல் கூட்டத்தையும் பார்க்கலாமே ?



விருட்சத்தின் முகவரி விதையில்,
பாலின் முகவரி பசுக்காம்பில்,
ஊமையின் முகவரி மௌனத்தில்,
ஊமைகளாய் மாற்றப்பட்ட எங்கள்
வாழ்க்கையின் முகவரி எங்கே ?
உயிர் கொடுத்து கருவறுத்தல் இதுதானோ?
எங்கள் முகவரி (கருவறை) தாங்கிய
தாயுள்ளம் எங்கே ? ? ? ,,

முகவரி தொலைத்த முகில் கூட்டம்
தன் பயணத்துக்கு காற்றை
இணைத்ததாய் எங்கள் தனிமை
உணர்வுகள் சேர்த்துக் கொண்ட எங்களின் துக்கம்.

மறுபிறவி வருமேயானால்
அனாதை என்ற வார்த்தை மற்றும் எங்களுக்காக
அனாதையாக்கப் படவேண்டும.

எங்கள் நிலை காணும் , சிலர் 
உதிரத்தில் உறைந்த உணர்வுகளை 
துயில் எழுப்பத் துடிக்கும் அவர்கள்
இரத்த அணுக்கள் சந்திக்கும் 
ஒவ்வொரு கணமும்.

அனாதையாக வடிக்கப் பட்ட சிற்பங்களுக்கு ( கோயில் கருவறை) முகவரி கிடைக்க ஏங்கும் என் உள்ளத்தின் சத்திய வாக்குமூலம்.

மகேஷ்.......

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

April 27, 2011

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்.)



துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் 
பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் .

காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை 
நனைக்கும் கண்ணீரால் என்ன பயன்.

எல்லா உணவையும் ருசிக்க ஆசைப்படலாம்,
ஆனால் நீ உன் நாவை ருசிபார்க்க முடியுமா,
திரும்பாத தூரத்தில் நம் காதல்.

காதலுக்கு கல்லறை முகவரி தந்துவிட்டு
போலி பிணங்களுடன் நிஜ வாழ்க்கை 
நடத்தும் உன் உள்ளம்.

நீயா இல்லை 
நானா ?
யார் முதலில் காதல் குற்றவாளியானது,????



காலம் கடந்து திரும்பிய உன் காதலால் 
என் கருவறை காத்திருக்காததால்,
கல்லறைக்கு சென்றுவிட்டோம்...
(நானும் உன் தலைமுறையும்). . .


-- மகேஷ்.......
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

April 18, 2011

ஒரே பார்வையில் அடைமழை



நீ இல்லாத வாழ்க்கையில் 
என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட
பகை கொள்ள துடிக்கிறது. 

நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் 
நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் ..
உன் கண்களில் பெருக்கெடுத்து 
நம் காதலுக்கும், காலத்துக்கும்
பதில் சொல்ல வரும் உன் கண்ணீருக்கு
பதில் சொல்ல இலக்கியத்தில் தேடியும் 
என்னிடம் வார்த்தைகள் சிக்கவில்லையடி.

உனக்கென்ன,,
என் மார்பில் தலை சாய்த்த அக்கணமே,
உன் காதலை இறக்கி வைத்துவிட்டாய் .
சுகம் தாங்க முடியாமல், சுதாரிப்புகள்
தொடராத தவிப்புகளில் நான் இங்கே.



உன் ஒரே பார்வையில் இந்த
ஆடை நெஞ்சின் விரிசல்களில் தினம் தினம் 
நீ அடைமழை தருவதால் மட்டுமே,
இத்துனை தவிப்புகளிலும் நான் வாழ்கிறேன்.


மகேஷ்...

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

April 9, 2011

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் - 1


என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள்,
 

பெண்மையெனும் கவிதையை  சித்தரிக்க 
நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் .
இங்கு பெண்மையே,
தன் கிறுக்கல்களை, உளறல்களை,,
எழுத்துக்களாய் படைத்தது.. 
அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ? 

இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக 
எழுத்துக்களில் செதுக்கிய என்னைவிட ,
நீ உன் கவிதையில் 
காட்டிய சொல்லதிகாரம் என் எழுத்துக்களையும் 
வென்று விட்டது.

முன்பு எழுதப் பிறந்தவன் என்ற ஆணவம் 
கொண்டிருந்தேன் ..
உன் எழுத்துக்களின் கட்டளை
என்னை ஆணவத்திடமிருந்து 
விடுதலை செய்தது ......

இத்தனை முறை ரசித்தாயா என்னை ???
உன் கவிதையை  சொல்லாமல் இருந்திருந்தால் 
இன்றும் நான் காதல் குருடன் தானடி.


எத்தனையோ  பிறவிகள் சேர்த்து வைத்த காதலை
உன் இந்த கவிதை சொல்லியதுபோல 
என்னில் துடிக்கும் ஓர் உணர்வு ..

என்னைச் சூழ்ந்தத ஒளியின் பரவசம்,
எதோ உன் பார்வை நரம்புகளின் 
பிரதிபலிப்போ என்று உரைக்கிறது என் 
உள்ளத்து உணர்வுகள்.


மகேஷ்..
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

April 4, 2011

தியாகத்தாய் - Thiyaaga thaaiy



மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் 
உன் ஒவ்வொரு  நொடி நினைவுகளும் 
என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே.

உயிர் கொடுத்து உலகத்தில் 
உலாவ விட்டவள் நீயே....

அன்று உன் கழுத்தை அலங்கரித்த
தங்கமகள் இன்று என் கல்லூரி 
விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு 
முகம் தெரியாத நபருக்கு அணிகலனாக
காத்திருக்கிறாள் அடகுக் கடையில்.

அம்மா என்ன செய்வேன் உனக்காக ....
உன் தியாகத்திற்காக....

என் ஜென்மங்களை அடகு வைக்கும்
கடவுளின் அடகுக் கடையை தேடி வருகிறேன்.
உன்னை தங்கத் தேரில் அமர்த்தி வளம் வந்து
என் கடனை தீர்க்க முயற்சி செய்வேன்.


தியாகத்தாய் : -

          அம்மா உன் தியாகத்திற்கு என் ஜென்மங்களில் பதில் இல்லை ...


மகேஷ்............. 

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

மீள்பார்வை



பூவே உன் மீள்பார்வைக்கு 
அந்த  மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும்.
என்னில் மறைத்து வைக்கப்பட்ட
உயிர் ஓவியம் நீயடி.

நாளுக்கு நாள், கனவில்  உன் நினைவுகளின் 
ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது,

நிஜத்தில் என் இல்லம்  அரங்கேறத் துடிக்கும் 
நம் வாழ்க்கை,
கனவில் சோதனை ஓட்டம் பார்க்கிறதோ என்னவோ.


மகேஷ்...

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....
Related Posts Plugin for WordPress, Blogger...