Pages

July 25, 2011

நிலவே காதல் நிலவே



பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால்
என் நிலவை பூமியில் படைக்க ?

வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ
பூமியுள் சுற்றித் திரிகிறாயே !

பூமி வரை வந்து விட்டாய்
என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ?

உன்னை நிரந்தரம் செய்ய
உள்ளமெனும் ஆகாயம் தேடுகிறது .






மகேஷ்.........

July 22, 2011

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன்
வானம் புரியவில்லை,

உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன்
மார்கழி புரியவில்லை.

உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன்
மொழியும் இனித்ததடி.

உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு
தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது).

என் தெய்வத் தாயுடன் பாசப்போர் புரிய வந்த
கன்னித்தாய் நீ தான் என்னவளே.

மகேஷ். மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்.

July 8, 2011

என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன்.



என் காதல் கருவுற்றாலும்,
மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும்,
நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய்
பறந்து திரிகிறாய்.

ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது.
உன் ஆண்மையின்  அழகு என்னை, என் ரசிப்புத் தன்மையை விலை பேசிவிட்டது.

தாயன்பை மட்டுமே உலகமாய் நினைத்து வாழ்ந்த என்னில்,
காதலனாய், காவியனாய் இடம் பிடித்தாய்.
நான் இழந்த என் தந்தை பாசம் உன்னில் கண்டேன் ....

உனக்காக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும் என் இரத்த நாளங்கள்,
நீ இல்லை என்று தெரிந்தாலும் ,
நீ இல்லை என்று மறுத்தாலும்,
உறைந்து விடும் அக்கணமே.

உனைக்கண்ட நிமிடமே என் பெண்மைக்கு
உன்னை அடையாளப்  படுத்திவிட்டேன்.


 -மகேஸ்வரன் 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு  செல்லவும். 
Please post your comments......                 
Related Posts Plugin for WordPress, Blogger...