Pages

August 23, 2011

மௌனக் கீதம் Mounageetham


 வழியெல்லாம் ரோஜாப்பூ சிதறிய
அலங்கரிப்பில் கிடப்பதைக் கண்டேன்.
சற்று தொலைவில் சிலருடன்
ஒரு அமரர் ஊர்தி நகர்ந்து கொண்டிருந்தது. 

உயிருக்கு விடை கொடுத்து விட்டேன், 
உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற
நிலையில் அந்த மலர்களும், அமரரும்
மௌனக் கீதம் இசைக்க.

அவருக்காக பிரம்மன் செய்த நாட்காட்டி
எமனால் செயலிழக்கப்பட்டது . நம் நாட்காட்டிக்கும்
 இதே நிலை என்ற  எண்ணம் கொண்ட உள்ளம்
தவறு செய்யாது...


இங்கு  வந்துவிட்டோம் ஒரு நாள் போவது உறுதி . இதற்கு இடையில் எதற்கு மனிதரிடையில் இடைவெளி.

மகேஷ்......


இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

August 11, 2011

காதல் கடன்காரி



என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட
உன் மௌனமே பதிலாய்.
என்ன செய்வேன், 
கண்ணீர் வடித்தாலும்
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.

நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே 
ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் !
சொல்லும்போது உன் உதடுகள் உச்சரிக்கும்
வார்த்தைகளை ரசித்துவிட்டு 
உயிர் விடவும் துணிவேன்.



இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...