Pages

October 25, 2011

திபாவளி நல்வாழ்த்துக்கள்-2011


உறங்கிய சந்தர்ப்பங்களும் 
தவறிய சந்தர்ப்பங்களும் 
உயிர்த்தெழும்
நம்மில் வாழும் கொடிய 
மிருகத்தை  விரட்டிவிட்டால் . 

தமிழ் நெஞ்சமே உன் மனம் போல் தீபத்திருநாளையும்
  ஒளியுர மலரவெய்.


தோழர்கள்  அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .

 - மகேஷ்.

October 19, 2011

நண்பனைப் பார்த்த கணம்



நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு
மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. 

என் நடை பாதைக்கு  வெளிச்சம் தரும் அந்த
ஒற்றை நிலா - சந்திரனே உன் நட்பு.

உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட
பிடிக்காமல் போனது என்னிடம்.

சுவைக்க சுவைக்க நேற்று பார்த்த திரைப்படக் கதை சொல்லி.....
உன்னால் என் கற்பனைத் திரையில் உருவான
எத்தனையோ திரைப் படங்கள்
எனக்கு மட்டுமே திரையிடப்பட்டு .

பிறப்பின் அர்த்தங்கள் தேடவில்லை(தேவையில்லை)
கடவுள் தந்த பரிசாய் நீ கிடைத்தபோது.

சொல்லெடுத்து நீ  நின்றால்  சோகங்கள் மரணிக்கும் ,
வில்லெடுத்து நீ நின்றால் அந்த
மரணமும் இலைமறைக் காய் போல மறைந்து விடும்.

எத்தனையோ நாட்கள் கள்ளிச் செடி மறைவில்,
தோட்டத்தில், தேநீர் கடையில் 
நான் ஒட்டிய புகை வண்டிக்கு சிவப்பு விளக்காய்
உன் அறிவுரைகள். இருந்தாலும் சில சமயம்
"இன்று மட்டும்  - ஒன்று மட்டும்" என்று எத்தனையோ நாட்கள்
கிடைத்த உன் அனுமதிகள் .

சிலருக்கு நண்பர்கள் பல கிடைக்கலாம்  
அனால் ஆயுள் வரை பயணிக்கும் நட்பு நமதே.
மகேஷ்...

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

October 15, 2011

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )



தியாகம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை
மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம்.

சில நேரம் நான் குறும்பு செய்யும்போது
ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு
தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன்.

நான் பார்க்கும் பழகும் உலகம் என்னால்
நீ அதிஷ்டம் என்பார்கள் ஆனால்
நான் தான் பாக்யசாலி.

உன் தியாகத்திற்கு கைமாறு செய்ய நினைத்து
என் அஸ்தியை உன் பாதம் படும் புற்களுக்கு
உரமாக போட்டாலும் ஈடாகாது தாயே.

மகேஷ்.....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...