Pages

December 31, 2011

சிந்தனைத் துளி பாகம்-1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.



௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

௨. ஒவ்வொரு வினாடி நிகழ்வுகளுக்கும் ஆண்டவன் ஏட்டில் காரணங்கள் பொறிக்கப் பட்டு இருக்கும், விதிக்கு காரணங்கள்  தேடாதே !

௩. வாழ்க்கைப் பாதையில் தொலைந்து போகும் பகலிரவுகளை பார்க்கும் முன், நீ இழக்கும் ஆயுளின் நிமிடங்களைப் பார். போராடு ஆயுள் நிமிடங்கள் தீர்ந்து போகும் வரை.

௪. எழுதாத காகிதங்களைப் பார்க்க பார்க்கத் தான் "எழுத்தே" மூளையில்
 வரிசை கட்டி நிற்கும்.நீயும் காலங்கள் இல்லாத நீரில் நடைபோடு, நல்வழிப் பாதையும் அதுவே.

௫. உள்ளம் மறக்க காதல், உலகம் மறக்க போதை என சிந்தையிழந்து வாழும் ஜடங்களைப் போல விநாடிகளை விலை பேசாதே.


மகேஷ்........

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

December 16, 2011

செல்ல மகளே ! Neerodai Kavithai

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள்.


செல்ல மகளே !
காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய
காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து 
"உனக்கே நான் சொந்தம் என்று"  சொல்வது போல தோன்றிய கணம் !
அவள் அரும்பாய் என் மடியில், நானோ வங்கி அலுவலக இருக்கையில் !

தமிழ் நடையழகு கூட நாணம் கொள்ளும் மகளே நீ நடக்கும் அழகை கண்ட நொடி !

என்னவள் உன்னை சுமந்த கருவறை சொல்லும்
அவளை காட்டிலும் இன்பச் சுமை எனக்கே அதிகம் என்று.

என் தாய் தந்த பரிசு நான்,
எனக்கு பரிசாய் கிடைத்த தாய், என் மகள் நீயே !

உன்னை பிரிந்து சென்றால் அது
உயிர் வலி !
உயிர் போகும் வழி !

மகேஷ் --
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

December 14, 2011

வீண் முயற்சி ! விடா முயற்சி ! Neerodai Kavithai

வீண் முயற்சி செய்யாதே, விடா முயற்சி செய் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். வீண் முயற்சியை விடாமல் செய்து என்ன பயன். பலரும் பல தருணங்களில் செய்து தோற்றுப் போகும் பொது உணரும் மனம் அந்த தோல்வியை சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை.


சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
கனவில் தினம் தினம் ஒரு மாளிகை
கட்டி முடிக்கிறது மனம்.

கண்கள் மூடிய உறக்கத்திலும்
காட்சிப்பிழைகள்.

கருவில் சுமப்பது வெறும் கல்
என்பது தெரியாமல்
கற்பனை திரை எதற்கு ?

அழும் மேகம் அறியுமா ?,,
விரிசல் விழுந்து வீனைய்ப்  போன
கரிசல் காட்டு பூமியை  மட்டுமே சிலிர்க்க
வைக்கும் சத்தியம் ?

தூரத்தில் தூறல் என்று
நாவரண்டு ஓடுகிறாய்
அந்த கானல் நீருக்காக !

விதை விருட்சமாக அது காலக் கணிதத்திடம் பதில் சொல்லியே ஆகா வேண்டும்,
ஆனால் காத்திருக்காத நீரோடைகள் சங்கமித்து
காட்டாறாக மாறி காலத்திற்கு கட்டளையிடலாம்  !

மழைத்துளி கூட முத்தாகும், விடம் கூட மாணிக்கமாகும், கற்கள் கூட அதிசயப் பொருளாகும். அது செல்லும் பாதை சொல்லும் முடிவுரை.


போராடு தோழமையே !
சரியான பாதையில் !
சரியான நேரத்தில் !


மகேஷ்..... 

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...