Pages

March 15, 2012

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி
நிலா மகளை நிலத்தில், இப்பூமியில்
தவழவிட்டு !
நினைவுகளை வருடிய கற்பனைகளால்,
காகிதத்தை வருடிய என் எழுதுகோலின்  மை
தீட்டி வரும்  வருணனைகள் தான்
அவளின் அழகு.



அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில்
ஒரு காதல் கோட்டை கட்டி வருகிறேன்.
கட்டுமானப் பணிகளின் ஓய்வு நேரங்களில்
என் கற்பனை குதிரையில்
அவளைத் தேடி பயணிக்கிறேன்.

பூமிக்கு பிரம்மன் படைத்த நிலவை
வானில் கண்டபோதெல்லாம்,
வானில் நட்சத்திரங்களும் என்னவளைத்
தேடத் தொடங்கியது !.


மகேஷ்....
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

4 comments:

Sekar said...

அருமை அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

arunkumar said...

very nice........

சித்தாரா மகேஷ். said...

//பூமிக்கு பிரம்மன் படைத்த நிலவை
வானில் கண்டபோதெல்லாம்,
வானில் நட்சத்திரங்களும் என்னவளைத்
தேடத் தொடங்கியது //.
உங்க நிலவை பத்திரமா பார்த்துக்குங்க.கவிதை அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...