Pages

April 27, 2012

மனம் கொத்திப் பறவை Neerodai Kaathal


தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன்.

விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே 2-ம் பாகம்

இப்போதெல்லாம் என் மனதில் மழைக் காலம் இல்லாமலே போனது.
நீ என்ற என் வானம் விண்வெளிப் பயணம் சென்றதால்.



உன் திருமணத்தில் நான் மணமகனாக,
உன் இறுதி ஊர்வலத்தில் நான் துணையாக,
என்று வாழ்ந்து வந்த என் நினைவுகளை,
கல்லறைக்கு முதல் பரிசு பெற அனுப்பியவளே.
நீ உன் வாழ்க்கையை வாழவில்லை,
உன்னை தான் உன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மணம் கண்ட என் உணர்வுகளை மதிக்காமல்,
பணம் கண்ட பாதையில் போறவளே !.

மரம் கொத்திப் பறவைகூட
மரத்தை காயப் படுத்தினாலும்
அதிலேயே தங்கி வாழும்.. ஆனால்
நீயோ என் மனதை கொத்திவிட்டு
பறந்து உன்வழிப் பயணம் செல்கிறாய்.

அழகிப் போட்டியில் உன்னழைகை உலகம் பார்த்து
முதல் பரிசு கொடுத்தாலும்,
என் மனதில் அங்கே நீ வெறும் கல் தான்.

என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்,
நீயும் , உன் அழகின் தரிசனங்களும் என்றும்
எனக்கு மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கும்
என் கரிசனங்கள் (உன் காதல்).


விழியிழந்து வழியனுப்புகிறேன் முதல் பாகம் -- கிளிக் செய்யுங்கள்

மகேஷ்...........
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

April 10, 2012

போராடு - வெற்றி அருவி உன் காலடியில்

தன்னை மறந்து  ( தோல்வி பயத்தில் )
தனிமையில் நின்று
உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து
சிலையாய்ப் போன நாட்களில்
நானிருப்பேன் என்று
உன்னிடம் ஊமையாய் இருக்கும்
நம்பிக்கை என்ற வார்த்தையின்
புலம்பல்களை கைவிடாதே !



உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில்
இலக்கு மட்டுமே கேள்வியாய் !

பாதை எதுவானாலும் எடுக்கும் முடிவு
உன் கையில்.
பாதையின் தொடக்கம் உன் காலடியில்.

என் கவிதைக்கு தோள் கொடுக்கும் தோழரினமே
உங்கள் கண்களில் இரயில் பெட்டிக் கோர்வையாய்
ஓடும் என் கவி வரிகள் அர்த்தப்படுவது
உங்கள் பார்வைகளில் மட்டுமே.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் பாதையோர
தார் சாலையில் அமைந்த ஒரு சிறு
விளக்காகவாவது இருக்க ஆசை கொண்டு
சில சிந்தனைகளை எழுதுகிறேன்.

போராடு தோழனே....
வெற்றி அருவி திசை அமைத்து 
உன் காலடியில் விழும்....


- மகேஷ்..

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்......Please post your comments......

April 5, 2012

தேனீக்கள் Kavithai

மொழிகள் சுவைக்க தோன்றும்
உன் பெயரை உச்சரிக்கும்
என் உதடுகளைச் சுற்றி  வட்டமிடும்
தேனீக்கள் கூட்டம் .


பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல்
தவித்த போது, என் கைபேசியில்
சேமித்து வைத்த வரிகளை உனக்கு
அனுப்பிய கணம்,
உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு
பதில் சொல்லும் இனிய குரலில்
செல்லமே என்றழைத்த போது. 
   
 - மகேஷ்.
 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே- பாகம் 1 - Neerodai Kaathal

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன்.


விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே 1-ம் பாகம்



நீ போகும் இடமெல்லாம் நிழலாக
நான் வர வேண்டும். இல்லையென்றால்
நிழல் விழாத அளவு வெளிச்சத்தில்
உன் பயணம் இருக்க வேண்டியிருக்கும்.

சிக்கெடுக்கும் உன் கூந்தலுக்கு
சீப்பாக இருக்க வேண்டும்.
சிதறி விழும் உன் கூந்தல் மயிரிளைகலாக
வேண்டாம் என் பந்தம்.


நான் கண் கொண்டதே, இதுவரை
இலை மறைக்காயாய் நீ இருந்ததால்.
மற்றவர் பார்வைக்கு நீ ஒரு ஊடகமாய்
மேடையில் நிற்கையில், பிழை செய்கிறேனோ
இன்னும் என் கண்களை விட்டு வைத்த வன்னம்.

என் புலம்பல்களை இந்த நீரோடையில்
கலக்கிறேன். உன்னைச் சேர்கையில் பார்
இதன் நிறம் சிவப்பாக மாறி இருக்கலாம்.
இந்த காதலுக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியும்
மன்னிக்க தெரியாது.



நீ ஓடிக் கலைத்து வந்து இழைப்பார
அமரும் நிழலடி அசையா
மரமாக இருக்க விரும்பவில்லை நான் !.,
ஆயிரம் மரங்களை நாடும்
வல்லமை கொண்ட அரவான் நான்.

இந்த நிஜத்தை தொடர்கதையாக  சமர்ப்பிக்க ஏற்பாடுகளில் உள்ளேன் .... கூடிய விரைவில் கதை ஆரம்பிக்கும்.. கதையின் தொடக்கம் இந்த கவிதையின் சூழ்நிலையே..

- மகேஷ்.

மரம் நடுவது நாளைய உணவுக்கான இன்றையமுதலீடு.

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...