Pages

May 28, 2012

உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது


உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும்,
நீ முன்னேற யோசித்தால் போதும்.

உன் தேகம் தீண்ட சூரியன் உன்னிடம் அனுமதி கேட்க்கும்
உன் தோள்கள் வியர்வை சிந்த சம்மதித்தால்.

விரல்களில் மறைந்திருக்கும் ஆயிரம் வித்தைகள் விளையாடும்,
மடக்கி வைத்த உன் விரல்களுக்கு விடுதலை கொடுத்தால்.

புத்தகத்தில் எழுத்துகளும் உன் கண்கள் தரிசனத்திற்கு எங்கும்
உன் கண்கள் அதை ரசிக்க தொடங்கினால்.

ஊடகம் இருந்தும் தூக்கத்தில் போடுவது எதற்கு தோழனே.!
என்னில் சில ஊடகங்கள் தினமும் தூங்குவதை கண்டு
வியக்கிறேன். ஓய்வு நேரம் குறைவு என்பதால்.

உழைக்க நிமிடங்கள் கிடந்தும் வெறும் பார்வையாளனாய்
இருந்திடாதே. வேண்டுகிறேன்.



உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது.


நீரோடை-மகேஷ். 
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

May 22, 2012

எனக்காவே நீ வேண்டும் - காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும்
பட்டம் நீ என்று கூறினாய்.



என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.!
உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி
கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ.

எனக்காகவே நீ வாழும் நேரம் - நான் தெளிந்த நீரோடை.
மற்றவர் மனதில் நீ வாழும் கணம்
என்னில் நெளிந்த பாம்புகளின் விடம்,
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றபடியே.

எனக்காக நீ வாழாத கணம், நீ எனும்,
நெருப்புத்துண்டுகள் நிறைந்த கூடாரத்தில்
அடைக்கப்பட்ட பறவை நான்.
சிறகுகள் ஓய்ந்தாலும், நான் பறக்க மறந்தாலும்
இழப்பு என்னவோ எனக்கு மட்டும்.


எனக்காகவே நீ வாழ்வதென்றால் இந்த ஜென்மத்தை தொடர்வேன்,
இல்லையென்றால் என் எந்த ஜென்மத்திற்கும் நீ இல்லை.

தனியாக வாழத்தொடங்கி, ஜென்மத்தை முடிக்காமல்,
ஒரு வழிப் பாதையில் இந்த அமரர் ஊர்தி.


 மகேஷ்........

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்......
 Please post your comments......

May 4, 2012

காதல் மழை


நான் சோகத்தில் இருக்கையில்.....
தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு
கொன்று விடுகிறேன்,
அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.



சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும்
மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.

உன்னில் உன்னை இன்பச்சிறையில்
வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான்.

சிகரங்கள் தொடும் துன்பங்கள்,
துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த
இந்த திசையறியா வாழ்க்கைப் பயணத்தில்
கண்கள் இருந்தாலும் கைபிடித்து
நடக்கும் ஒரே ஜீவன் நீயே.


கை பிடித்து நடை பழக்கிவிட்ட
தந்தைக்கு இணையாக மனதில்
எனக்கு இடம் தந்தவளே.!

உன் சோக மேகங்களை உன் வானில்
தக்க வைத்துக் கொள்ளாதே !
வானில் ஓர் பூகம்பம் வந்தால்
இந்த பூமி தாங்காது தங்கமே.


நீரோடை மகேஷ்............
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...